
இன்று காலை முன்னதாக 21 அமைச்சர்களின் பதவியேற்பு இடம்பெற்றதைத்தொடர்ந்து 2 பெண் அமைச்சர்கள் உட்பட மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
.புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. பெண் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை என்ற விடயம் எமது செய்திச்சேவையால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.