அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கும் வேறொரு கிராமத்தில் மாலை நேர கல்வி நிலைய மாணவர்களுக்கும் மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்.
பயன் பெற்ற மாணவர்கள் தமது நன்றியைத் தெரிவித்ததுடன் அப்பகுதியில் உள்ள மக்களும் திரு. திருமதி. கிரிதரன் தம்பதியினருக்கு தமது வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.