மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் தாழ் நிலப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பபுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் அதிளவு வெள்ள நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெரியபோரதீவு மட்பாண்ட வீதியில் அமைதுள்ள வீட்டிலிருந்து தென்னை மரம் ஒன்றும் காற்றினால் சரிந்து அயல் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.
இதுஇவ்வாறு இருக்க மட்டக்களப்பில் 120.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ கிரானில் 58.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ உன்னிச்சையில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ உறுகாமத்தில் 51.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ வாகனேரியில் 158.7மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ கட்டுமுறிவில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ நவகிரியில் 56.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ தும்பங்கேணியில் 64.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ மைலம்பாவெளியில் 103.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ பாசிக்குடாவில் 89.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ கல்முனையில் 24.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்இ செவ்வாய்கிழமை(04) காலை 8.30மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க செவ்வாய்கிழமை காலை 6 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 4அங்குலம்இ உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 15அடி 4அங்குலம்இ வாகனேரி 18அடி 0அங்குலமும்இ கட்டுமுறிவுக்குளம் 12அடி 6அங்குலம்இ கித்துள்வெவகுளம் 7அடி 5அங்குலம்இ வெலிக்காக்கண்டியகுளம் 15அடி 3அங்குலம்இ வடமுனைக்களம் 12அடி 8அங்குலம்இ நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 29அடியாகவும்இ தும்பற்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 8அங்குலமாகவும்இ உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அடைமழை பெய்து வருவதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டை – சின்னவத்தை வீதிஇ வெல்லாவெளி – மண்டூர் வீதிஇ மாலையர்கட்டு – றாணமடு வீதிஇ ஆகியவற்றை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கிரான் வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிப் போக்குவரத்திற்கு இயந்திரப்படகு பயன்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் – சக்திவேல்