“கோட்டா கோ கம” போராட்டம் தொய்வடைந்து விட்டதாக தெரிவிக்கப்பபட்ட கருத்துக்கு போராட்டக்காரர்கள் பதில் கொடுத்துள்ளனர்.
கோட்டாவையும் ரணிலையும் விரட்டுவது மட்டுமன்றி நாடாளுமன்றத்தையும் சுத்தப்படுத்தி விட்டே செல்லப்போவதாக காலி முகத்திடல் போராட்டகாரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
74 வது நாளாக கோட்டா கோ கம போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற நிலையில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது போராட்டத்தின் வீழ்ச்சி அல்ல எனவும் மக்கள் தொகை குறைந்துள்ளமைக்கு எரிபொருள் பற்றாக்குறை போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனவும் கூறியுள்ளனர்.