இலங்கைசெய்திகள்

உரிய தரத்தில் கப்பலிலுள்ள லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு!!

gas cylinder

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு கப்பலில் உள்ள எரிவாயுவில், ப்ரொபேன் மற்றும் பியூட்டேன் இரசாயன கலவைகளின் செறிமானம் உரிய தரத்துடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கப்பலில் உள்ள எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா அனுமதியளித்துள்ளார்.

இலங்கை தரநிர்ணய நிறுவகம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றின் தரநிபந்தனைகளை பூர்த்தி செய்ததை அடுத்து, லாஃப்ஸ் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பரிசோதித்ததன் பின்னர், குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை சந்தைக்கு விடுவிக்க அனுமதி வழங்கியதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

2 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய குறித்த கப்பல் அண்மையில் நாட்டை வந்தடைந்திருந்தது.

எவ்வாறிருப்பினும், இலங்தை தரநிர்ணய நிறுவகம் பரிந்துரைத்த இரசாயன கலவை செறிமானத்தின் அளவு பொறிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களினால், சந்தைக்கும் விநியோகித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய செறிமானம் பொறிக்கப்பட்ட கொள்கலன் இதுவரையில் சந்தைக்கு கிடைக்கவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button