நினைவு அஞ்சலி

இராசையா யோகேஸ்வரி

யாழ். புத்தூர் மணல் பகுதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா யோகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா
உன் மடி மீது எனை சுமந்தவளே!
உதிரத்தை பாலாக தந்தவளே!
சோறூட்டி, தாலாட்டி, பாராட்டி
எனை வளர்த்த என் தாயே
இறுதியில் உன் முகம் காணா
தவித்தேனே, கலங்கினேனே, கதறினேனே
துடிதுடித்தேனே
அம்மா இனி எப்போது உனை பார்ப்பேன்
இனி எவ்வாறு உன் குரல் கேட்பேன் அம்மா
உன் முகம் பார்கின்
என் சொந்தங்கள் தெரியும்
உன் குரல் கேட்பின்
உலகத்தின் ஆறுதல் கிடைக்கும்
உன் அன்பின் முன்னே
உலகத்தின் சகலதுமே
என் காலடி கிடக்கும் அம்மா
நான் வாழ்கின்ற வாழ்க்கை
நீ கொடுத்த வரமே!!
நீ என் தாயாக பிறந்ததுவும்
நான் கொண்ட தவமே!! உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Back to top button