உலகம்செய்திகள்

மரண விளிம்பில் நின்றபடி நண்பர்களுடன் உரையாடிய சகோதரர்கள்!!

death

பிரான்ஸ் கலை என்னும் இடத்தில் இருந்துநேற்று முன் தினம் 31 அகதிகள் சிறு படகு ஒன்றின் மூலம் பிரித்தானியா செல்ல செய்துள்ளார்கள். இருப்பினும் கடல் சீற்றம் காரணமாக படகு புரண்டதில் குளிரில் நடுங்கியே( ஹைப்பத்தேமியா) அனைவரும் சில நிமிடங்களில் இறந்து விட்டார்கள்.

இதேவேளை ரிஸ் மொகமெட்(12) சாரீஷ் மொகமெட்(17) ஆகிய இரு சகோதரர்களும் கடலில் அவர்களது படகு தள்ளாடும் போது கரையில் இருந்த நண்பர்களோடு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாக உள்ளது நாம் பிரித்தானியா செல்ல முடியாது போல . நாம் இறக்கப் போகிறோம் எனக்கூறியுள்ளனர். கரையில் இருந்த நண்பர்கள் அவர்களுக்கு தைரியம் சொல்லி உள்ளார்கள். ஆனால் சில நிமிடங்களில் எல்லாம் அவர்கள் படகு பிரண்டு விட்டது. 2 கை குழந்தை உட்பட 31 பேர் மிக மிக பரிதாபமாக இறந்து விட்டார்கள்.

இந்த துயரச்சம்பவம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button