இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தரமற்ற மருந்துகளால் இதுவரை 9 பேர் உயிரிழப்பு!!

Death

 நாட்டில் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தரமற்ற மருந்துகளின் பாவனைகளால் கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சுகாதார துறையை தனியார் மயப்படுத்த வேண்டாம். நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தஆரச்சி கூறுகையில்,

கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தரமற்ற மருந்து பாவனைகளால் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார ஊழியர்களான எமக்கும், மக்களுக்கும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தரமற்ற மருந்துகள் காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே சுகாதார துறையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருகின்றோம். அத்துடன் நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மேலும், தரமற்ற மருந்து பாவனை தொடர்பில் அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ கூறுகையில், உண்மையில் இதுபோன்ற தொடர் மரணங்கள் சம்பவிக்கும் போது ஒளடதங்கள் காரணமாகவே இச்சம்பவங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியங்கள் போன்ற இடங்களிலும் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுகிறது. சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் கருத்து தெரிவிக்கையில்,

பேராதனை போதனா வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்த போது அந்த மருந்தினை தடை செய்ய முடிந்தது. தடைசெய்யப்பட்டமையால் அதற்கு அடுத்த மரணங்கள் பதிவாகாமல் தடுக்க முடிந்தது.

எனினும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்த மருந்தினை பயன்படுத்தியமை காரணமாக மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நிராகரித்தமை காரணமாகவே மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.  

Related Articles

Leave a Reply

Back to top button