இலங்கைசெய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

death

அணைக்கட்டில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை, ஹிங்குருக்கொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாடுகளை அழைத்துக்கொண்டு அகேரிஸ் அமுன பிரதேசத்துக்கு நேற்றுக் காலை சென்ற அவர், மாலையாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில், உறவினர்கள் இன்று காலை அவரைத் தேடிச் சென்றபோதே அவர் அணைக்கட்டில் விழுந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஹிங்குரக்தமன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button