இலங்கைசெய்திகள்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட வேலைத்திட்டம்!!

Consumer Protection Authority

நிதியமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், சந்தையில் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவினால் பிரதேச செயலகங்களின் ஊடாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் அரிசி, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் ஆராயவுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பல பாரவூர்திகள் சேவையில் இருந்து விலகியுள்ளன.

இதனால் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button