பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரைக்கு வந்த துணிவு, வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் நாள் கூட்டம் பாதியாக சரிந்துள்ள சம்பவம் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை தான் கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு விடுமுறை சனிக்கிழமைகளில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக இன்றும் நாளையும் செல்வார்கள். இதனால் இரண்டாவது நாளில் குடும்ப ரசிகர்கள் யாரும் திரையரங்குக்கு வரவில்லை. முதல் நாள் காட்சி ரசிகர்கள் கண்டு களித்தனர். இரண்டாவது நாள் காட்சியை பொதுமக்கள் யாரும் அவ்வளவாக வரவில்லை. கும்பகோணத்தில் துணிவு படத்தை காண வெறும் முப்பது பேர் மட்டுமே வந்திருந்ததால் திரையரங்கு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதேபோன்று பல மல்டிபிளக்ஸ் துணிவுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் ஸ்கிரீன்கள் ரத்து செய்யப்பட்டு சிங்கிள் ஸ்கிரீனிலே படம் திரையிடப்பட்டது.
அதேபோன்று வாரிசு திரைப்படத்தின் கூட்டமும் பாதியாக குறைந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு மக்கள் தயாராகி வருவதால் திரையரங்குக்குச் செல்ல நேரமில்லை என்பதை இதை காட்டுகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டு பட குழு மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். தவறான தேதியில் படத்தை ரிலீஸ் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக வாரிசு ஜனவரி 12ஆம் தேதி தான் முடிவு செய்யப்பட்ட நிலையில் துணிவு ஒரு நாள் முன்பே சென்றதால் அந்த குழுவினரும் பதினொன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். இதனால் இரண்டு பட நிறுவனங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் செய்திருந்தால் வியாழக்கிழமை ரசிகர்களும் வெள்ளிக்கிழமை குடும்ப உறுப்பினர்களும் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த நிலை வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இருந்து தலைக்கீழ் மாற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து மீண்டும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக இரண்டு படங்களுமே இருக்க கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.