தமிழ் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு எதிராக ஒன்ராறியோவில் வழங்கப்பட்ட மனுவை நிராகரித்தது
ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.
எனினும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது.