இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

கொழும்பில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜி.என். சில்வா தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டையை சமர்ப்பித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய, நாளை (15) விஷாகா, தர்ஸ்டன், புனித பெனடிக் மற்றும் விவேகானந்தா ஆகிய பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button