இந்தியாசெய்திகள்

தமிழ்நாடு – நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா!!

Award function

நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் 12.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, நுங்கம்பாக்கம், எலான்ஷா நட்சத்திர ஹோட்டலில் சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில்,

லிம்ரா பேக்ஸ் Cosmolimra  எம்.சாதிக் பாட்சா (செயலாளர், நந்தவனம் பவுண்டேசன்) முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை இலக்கியப் புரவலர்     ஹாசிம் உமர், இலங்கை தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில் வேலவர்,  மதுரா டிராவல்ஸ் வி. கே. டி.பாலன் மற்றும் முதல் உலக மூத்த குடிமக்கள் அமைப்பின் நிறுவனர்  அசோக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய தமிழ் நாட்டின் மாவட்டங்களிலும், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் , கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட சாதனைப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நந்தவனம் பவுண்டேசன் , பொருளாளர் பா.தென்றல் வரவேற்புரை வழங்க, கவிஞர் சொர்ண பாரதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

முன்னதாக, குழந்தைகளின் பரதநாட்டியமும், தொலைக்காட்சி புகழ் பாடகி டி.சாதனாவின் மெல்லிசைப் பாடல்களும் பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்தன.

முனைவர் வே.த.யோகநாதன் நன்றி கூற, மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button