வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்ததடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை இல்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.