இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (03.07.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

பெரமுன சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் – மகிந்த தெரிவிப்பு!! 

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திரும்பிய மகிந்த ராசபக்ச செய்தியாளர்களைச் சந்தித்த போது,  பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

2.

கஜேந்திரகுமாருக்கு மூன்று மாத விடுமுறை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடுமையான சுகயீனம் காரணமாக  நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

3.

அதிகாரப் பகிர்வை நிறைவேற்றுவதே சம்பந்தருக்கான அஞ்சலி – ஜனாதிபதி தெரிவிப்பு!! 

அதிகாரப் பகிர்வு தொடர்பில் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சம்பந்தரின் அவாவினை நிறைவேற்றுவதே அவருக்கான அஞ்சலியாக இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

4.

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவழியோம் – ஐக்கிய மக்கள் சக்தி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கம் அமைக்க முயன்றால் அதற்கு ஆதரவு வழங்குவதில்லை என ஆக்கட்சி முடிவு செய்துள்ளது. 

5.

வெடிகுண்டு புரளி கிளப்பியவர் கைது!! 

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதாக வதந்தி பரப்பியதால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று நடைபெறவிருந்த சகல வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இருப்பினும் குறித்த பொய்த்தகவலைப் பரப்பிய நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். 

6. 

பேருந்து கட்டணம் திருத்தம்!!

பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button