*நேரடியாக 50 மாணவர்களும் இணைய தளம் ஊடாக 500 க்கு மேற்பட்டோரும் பயன்பெற்றனர்.
கடந்த திங்கள் இரவு 6 மணிக்கு வளர்மதி கல்விக் கழக மண்டபத்தில் தமிழ் பாடத்துடன் ஆரம்பமான இந்த கருத்தரங்கு தொடர்ச்சியாக சனிக்கிழமை வரை மிகச் சிறப்பாக கணிதம , ஆங்கிலம் , வரலாறு , விஞ்ஞானம் , சமயம் என இடம் பெற்றிருந்தது.
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் மட்டுவில் கனடா வாழ் சமூக ஆர்வலர் செந்தூரனின் “பிரணவன் அறக்கட்டளை” ஊடான அனுசரனையுடன் இரண்டாவது வருடமாக இக் கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
ஏறத்தாழ் 100 000 ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் மாணவர்களுக்கான இலவச கையேடுகள் , சிற்றுண்டிகள் , நீராகாரங்கள் , ஓலி ஓளி அமைப்புகள் என்பவற்றுடன் திறம்பட இடம் பெற்றது குறுப்பிடத்தக்கது.
மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு வழிகாட்டலை வழங்கிய யாழ் பிரபல வளவாளர்களுக்கும் சிறப்பாக ஒழுங்கமைத்த வளர்மதி கல்விக்கழக பொறுப்பாசிரியர் , நிர்வாகத்தினர் மற்றும் அனுசரனை வழங்கிய கல்விச் சமூக ஆர்வலர் சு . செந்தூரன் (கனடா) அவர்களுக்கும் ஐவினஸ் தமிழ் சார்பாகவும் பயன்பெற்ற மாணவர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.