இலங்கையின், பாடசாலைக் கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் சுமார் 5 வருடங்களாக கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு உள்ளீர்க்கப்படவில்லை என அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.