மாணவர்கள் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி அழைத்துசெல்கின்றார்.
கோழிகள் தங்கள் குஞ்சுகளை சிறகுகளுக்குள் மறைத்து காப்பது போல மழை வெய்யில் காலங்களில் பொதுவாக அம்மாக்களே இவ்வாறு பிள்ளைகளை அழைதுச் செல்வதனை நாம் கண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் ஆசியை ஒருவர் இவ்வாறு மாணவர்களைத் தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துச்சென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.