தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களைப் பத்திரிகைகளில் வெளியிட முறையான வழிமுறையை அமைக்கவும் அந்நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றைத் தடை செய்யவும் குறித்த உபகுழு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகார சபை போன்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் துணைக் குழுவின் தலைவரின் தலைமையில் உப குழுக்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.
போலியான NVQ சான்றிதழ்களை இனங்கண்டு குற்றவாளிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையையும் குழு, அமர்வின் போது வலியுறுத்தியது.
சான்றிதழின் QR குறியீட்டின் மூலம் போலி சான்றிதழ்களை அடையாளம் காண முடியும் என்றாலும், சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், எனவே, குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் தொடர்புடைய சட்டத்தில் திருத்தங்களை செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் குழு தெரிவித்தது.