சமுக வலைத்தளமான டுவிட்டரும், மறைகுறியாக்கப்பட்ட தகவல் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இனி டுவிட்டர் பாவனையாளர்களால் அனுப்பப்படுகின்ற தனிப்பட்ட தகவல்களை, அனுப்பியவரும், பெற்றவரும் மட்டுமே வாசிக்க முடியும்.
டுவிட்டரால் அந்த தகவலை வாசிக்க முடியாது. ஆனால் இந்த வசதி அனைவருக்கும் இன்னும் அமுலாக்கப்படவில்லை.
டுவிட்டர் பாவனைக்காக கட்டணம் செலுத்துகின்ற மற்றும் உறுதி செய்யப்பட்ட கணக்குடையவர்களுக்கு மட்டுமே இந்த வசதி அமுலாக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், ‘இனி தமது தலைக்கே துப்பாக்கி வந்தாலும் கூட, அந்த செய்தியை தம்மால் பார்க்க முடியாது’ என கூறியுள்ளார்.