Breaking Newsஇலங்கைசெய்திகள்

போலி பணத்தாளுடன் சிக்கியவர்களுக்கு விளக்க மறியல்!!

Arrested

 நேற்று முன்தினம் A 9 வீதி , ஆனையிறவு வீதித்தடையில் போலி நாணயத்தாளுடன் சிக்கியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் 26 வயதான ஆட்டோ சாரதி ஒருவரும் 250 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களையும் 27 ஐநூறு ரூபா போலி நாணயத்தாள்களையும்  வைத்திருந்த நிலையில் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது மாணவரின் வீட்டில் இருந்து 5 000 ரூபா போலிநாணயத்தாள்கள்  5 உம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button