வெசாக் பௌர்ணமி தினத்தில் (5) பெனும்ப்ரா சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திர கிரகணம் நாளை இரவு 08.44 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை (6) அதிகாலை 01.01 மணிக்கு முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
இந்த கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிக்கா பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் காணலாம்.
புவியின் பகுதி நிழலினூடாக சந்திரன் கடந்து செல்லும்போது பெனும்ப்ரா எனப்படும் புறநிழல் சந்திர கிரகணம் நிகழும். இவ்வகை கிரகணங்களின் போது சந்திரன் சற்று இருண்டு காணப்படும்.