உலகம்செய்திகள்

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட உக்ரைன் குழந்தைகள்!!

Ukraine

 உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. 

இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும் அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷ்யா மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியது. 

இதனை மறுத்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக கூறியது.

இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பிடியாணை பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக ஹரீயூனைட் உக்ரைன்’ என்ற கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில் அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

தற்போது 30-க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில் மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

உக்ரைனுக்கு திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷ்ய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button