அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இலங்கையின் கலாச்சார விழாவான “லங்கன் ஃபெஸ்ட்” 2022 ஓக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
“லங்கன் ஃபெஸ்ட்” என்பது இலங்கையின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக கருதப்படுகின்றது.
இது ஆ யிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினை மூலம் இலங்கையின் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
“லங்கான் ஃபெஸ்ட் 2022” ஞாயிற்றுக்கிழமை (23) மெல்போர்னில் உள்ள குயின் விக்டோரியா சந்தையில் மீண்டும் தொடங்கப்பட்டு, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.