இலங்கைசெய்திகள்

குறைந்து செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை!!

Doctors

6 மாதங்களில் மட்டும் 1,486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் இந்த வருடம் ஜனவரி மாதம் 138 வைத்தியர்களும், பெப்ரவரி மாதம் 172 வைத்தியர்களும், மார்ச் மாதம் 198 வைத்தியர்களும், ஏப்ரல் மாதம் 214 வைத்தியர்களும், மே மாதம் 315 வைத்தியர்களும், ஜூன் மாதம் 449 வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தரவுகள் வெளிவந்துள்ளன.

இவர்கள்,இலங்கை வைத்திய பேரவையிடமிருந்து நற்சான்றிதழ் பத்திரத்தையும் பெற்றே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் இவ்விடயம் ஒரு நாட்டிற்கு ஆரோக்கியமற்ற விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் வெளியேற்றத்திற்கு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button