தமிழைப் போற்றிப் புகழ்ந்த
ஈழமெனும் திருநாட்டில்;
தமிழையும் தமிழரையும்
வேறோடு சாய்த்தது
அந்நிய கைப்பாவைகள்.
வீரம் பொருந்திய மண்ணில்
தமிழின் குருதி குடித்து
இரத்தக் காடாய் ஆனது ஈழம்.
லட்ச உயிர் பிரிந்தது
மிச்ச உயிர் எரிந்தது
பெண்களின் எத்தனை கனவுகள்
கண்ணீரில் கரைந்தது.
ஈழத்தின் அழுகுரல்
தென்னிலங்கைப் பேய்ச் செவிகளில்
இசையாய் பாய்ந்தது போலும்.
முள்ளிவாய்க்காலில் விதைத்த
கோரத்தாண்டவம்
இன்று அதை விதைத்தவன்
வீட்டுக்குள் காண்கின்றோம்.
அன்று ஈழத்தமிழ் பற்றின் மரணம்
அவர்களுக்குச் சாபக்கேடு.
இன்று அது சாபத்திற்கான ஈடு.
அன்றோ தமிழர்களின் தேசபக்தி
போரால் கொல்லப்பட்டது.
இன்றோ தேசமே விரக்தியால்
நரகத்திற்குள் தள்ளப்பட்டது.
நினைவில் இருக்கட்டும்..!
காரணம் மாறலாம்
ஆனால் – காலம் மாறாது.
மனிதன் சாகலாம்
ஒருபோதும் – மனிதம் சாகாது…
எழுதியவர். – அ. சபிதா,
கலைமகள் தமிழ் வித்தியாலயம்.
யட்டதொலை.
மத்துகமை.