சமூக ஊடகச் செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மீறல் வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தி பொலிஸார் தன்னை அநீதியான முறையில் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்து பிணையில் விடுவித்ததன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ஜி.சந்தன குமார, பொலிஸ் மா அதிபர், ஏத்கால பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தன்னுடைய கைது நடவடிக்கையின் மூலம் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.