ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சு சம்மதம்!!
Ministry of Education
அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இணக்கம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் தொழிலாளர்கள் பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆசிரியர்கள் தூர இடங்களுக்குச் சென்று வருவதில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதை அடுத்து கல்வி அமைச்சிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். கல்வி அமைச்சினால் ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .
எனினும், இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுலாக்க முடியாது என்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின், தரவுகளை மதிப்பாய்வு செய்து, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.