இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை!!

சுற்றுலா அமைச்சு , சுற்றுலாத்துறையினருக்காக நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச தெளிவூட்டல்களை மேற்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

அதில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் 10 ஊடகவியலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேலும் 22 ஊடகவியலாளர்கள் நாட்டிற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள ஊடகவியலாளர்களில் 8 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர்.
யுத்தத்திற்கு பின்னர் தற்போதைய நிலவரம் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள சாதகமான காரணிகள் குறித்தும் அவர்கள் ஆய்வில் ஈடுபடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button