இந்தியாசெய்திகள்

கச்சதீவை மீட்கும் முனைப்பில் தமிழக அரசு!!

Government of Tamil Nadu

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கச்சதீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 88 படகுகளையும், கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் விளக்க குறிப்பேட்டில், கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button