இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

யாழில் குறைந்த பாராளுமன்ற ஆசனம் கம்பஹாவில் அதிகரித்தது

கம்பஹா மாவட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்படுவதாக கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலால் தெரிவித்துள்ளார். 

கம்பஹா வட்டத்துக்கு இதுவரை இருந்துவந்த பாராளுமன்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 18ஆக இருந்தது. 

புதிய வாக்காளர் பதிவில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய கம்பஹா மாவட்டத்துக்கு  ஒரு ஆசனம் அதிகரித்திருக்கின்றது. 

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்ட மட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 6 பாராளுமன்ற ஆசனங்கள் இருந்து வந்தன. 

தற்போது அது 5ஆக குறைவடைந்துள்ளது. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமையவே  ஒரு ஆசனம் குறைந்துள்ளது. அவ்வாறு குறைந்த ஆசனம் கம்பஹா மாவட்டத்துக்கு சென்றிருக்கின்மை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button