நாட்டில் அன்றாடம் அத்தியாவசியமான ஒவ்வொன்றினது விலைகளும் கூடிச்செல்லும் நிலையில்
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. 49 ரூபாவினால் சகல விதமான பெற்றோல் வகைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
ஒக்டென் 92 ரக பெற்றோலின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகவும் ஒக்டென் 95 ரக பெற்றோலின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.