இலங்கைசெய்திகள்

கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுண்டேசன் நிதி அனுசரணையில் வவு/ சிறி கணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கணினி ஆய்வுகூடம் நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் செட்டிக்குளம் கோட்டத்திற்குட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமமான பாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள சிறி கணேஸ்வரா மகா வித்தியாலயத்திற்க்கு வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுண்டேசன் நிதி அனுசரணையில் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை மாணவர்கள் இப் பாடசாலையில் கல்வி பயில்கின்றனர்.

இந்நிகழ்விற்கு வவுனியா தெற்கு வலய கல்வி வலயத்தின் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு. செல்வநாயகம்
அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பணிப்பாளர் திரு. கிருஸ்ணகுமார், வன்னி ஹோப் மற்றும் பி.எஸ்.டி.எப் நிறுவன உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர் சமூகத்தினர், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button