இலங்கைசெய்திகள்

எரிவாயு விவகாரம் – நாளை விசேட ஆலோசனைக்குழு கூடுகிறது!!

srilanka

சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் இதனை அறிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றில் கருத்துவெளியிட்ட நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, சமையல் எரிவாயு கொள்கலன் குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமையைத் தீர்க்கும் பொருட்டு, ஜனாதிபதியினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தக் குழு நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button