இலங்கையில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாகப் பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸ் தொற்று நோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வந்திருந்தவர்கள் என்றும், அவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கிணங்க நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சுடர்