இந்தியாவில் விசா காலாவதியானதன் பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் உத்தர பிரதேசம் சம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதான குறித்த நபர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு சென்ற நிலையில், 1997 ஆம் ஆண்டு பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், அவர்கள் தங்களுது பிள்ளைகளுடன் சம்பால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்த வந்ததாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையரின் விசா, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில, அவர் அங்கு தொடர்ந்தும் சட்டவிரோதமாக வசித்து வந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பணியக அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், தற்போது நீதிமன்ற தடுப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், அவருக்கு இந்திய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள உதவியவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.