இலங்கைசெய்திகள்

வவுனியாவை சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு!!

investigation

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டிடம் நாரன்பிட்ட முகவரியில் 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் (ரி.ஐ.டி) இன்று (29.11) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button