சினிமாசெய்திகள்

‘வலிமை’ – முக்கிய ஏரியாவைக் கைப்பற்றிய தயாரிப்பாளர்!!

valimai

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரங்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலேயே பெரிய ஏரியாவான செங்கல்பட்டு ஏரியாவின் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்கள் பெற்றுள்ளார்

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான இவர் நடித்த பிக்பாஸ் முகென் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் படத்தை ரிலீஸ் செய்த அனுபவமுள்ள கலைமகன் முபாரக் அவர்கள் தற்போது ’வலிமை’ படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார். தமிழகத்திலேயே செங்கல்பட்டு ஏரியாதான் மிகப்பெரியது என்பதும் , ரோஹினி, காசி மாயாஜால் உள்பட அதிக வருவாய் தரும் திரையரங்குகள் இந்த ஏரியாவில் தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு ஏரியாவில் கிடைக்கும் வசூலை வைத்துதான் ஒரு படத்தின் வெற்றியே நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ’வலிமை’ படத்தின் செங்கல்பட்டு ஏரியாவை தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் இவர் தனது ஸ்கைமேன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button