இலங்கைசெய்திகள்

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் பாடசாலைகளுக்கு விஜயம்!!

Teacher union representatives

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க உபதலைவர் பிரதீப் யாழ்வலய பிரதிநிதி வோல்வின் ஆகியோர் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு
ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான சகல கல்வி வலயங்களிலும் செயற்படும் சக்தி வாய்ந்த பிரபல்யமான தொழிற் சங்கத்தில் இணைய பதிவு மூலமான அங்கத்துவத்தை பெற்று டிஜிட்டல் அங்கத்துவ அட்டையையும் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விளக்கம் அளித்துள்ளனர்.

தொழிற்சங்க பேச்சுவார்த்தை உடன்பாடுகள் பலனளிக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் அவர்களால் கருத்து கூறப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button