அற்புதமான மருத்துவ குணங்களுள்ள பாதாம் பருப்பு!!
அழகுக்காகவும் சுவைக்காகவும் பலவிதமான உணவுகளில் பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. உயர்தரமான உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய ஓர் முக்கியமான பருப்பு வகையாக பாதாம் விளங்குகிறது. குறிப்பாக பல இனிப்புகளில் பாதாம் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
பாதாம் பருப்பு எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
பாதாம் ஊட்டச்சத்து / Badam Nutrition Facts
புரோட்டின், ஃபைபர், கால்சியம், தாமிரம், மெக்னீசியம்,விற்றமின்கள் , நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல சத்துக்கள் பாதாம் பருப்பில் நிரம்பியுள்ளன.
பாதாம் எப்படி சாப்பிட வேண்டும்?
பாதாமை வெறுமனே அப்படியே சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை. இருந்தாலும் இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊறிய பாதாம் பருப்பைச் சாப்பிட்டால் அது அதிக பலனைத் தரும். இதுவே பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கான சிறந்த முறையாகும்.
Vitamin E உணவு
Vitamin E சத்து அதிகம் நிரம்பியுள்ள ஒரு அற்புதமான உணவுப் பொருளாக பாதாம் பருப்பு திகழ்கிறது. இது கான்சர், இதய நோய், அல்சைமர் போன்ற பிரச்சனைகள் நம் உடலை நெருங்காமல் தடுத்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
கண் பார்வை அதிகரிக்க
விற்றமின் E உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. எனவே உங்கள் கண்களில் ஆரோக்கியத்தையும், பார்வைத் திறனையும் மேம்படுத்த பாதாம் சாப்பிடுங்கள்.
பசியை கட்டுப்படுத்தும்!
பாதாம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன் சத்து நிரம்பியுள்ளது . இது உங்களுக்கு அதிக பசி உணர்வு ஏற்படுவதை தடுக்கிறது. இதன் காரணமாக குறைந்த அளவு கலரி கொண்ட உணவுகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். எனவே அடிக்கடி பசி ஏற்படுவதை பிரச்சனையாக கருதும் நபர்கள் பாதாம் சாப்பிடுவது பசி ஏற்படுவதை தடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நல்ல கொலஸ்ட்ரோல் அதிகரிக்க
பாதாம் பருப்பில் 50 சதவீதம் கொழுப்பு நிரம்பியுள்ளது. கொழுப்பு என்று சொன்னவுடனே அச்சப்பட வேண்டாம்! பாதாமில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்து தான் அதிக அளவில் உள்ளது. தேவையில்லாத கெட்ட கொழுப்பை உடலில் குறைப்பதற்கும் பாதாம் உதவுகிறது. எனவே மிகவும் மெலிந்த உடல் தேகம் உடையவர்கள், உடல் எடையை சற்று அதிகரிக்க பாதாம் சாப்பிடலாம். மேலும் கெட்ட கொழுப்பு குறைவதனால், அதிக உடல் எடை உடையவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பாதாம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க பாதாம் மிகவும் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சருமம் அழகு பெற
பாதாம் பருப்பில் உள்ள flavonoid உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடனும், இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க பாதாம் நிச்சயம் உதவும்!
செரிமானம் சீராக நடைபெற
உங்கள் உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெற செய்ய பாதாம் பருப்பு உதவுகிறது. எனவே உடலில் சீராக செரிமானம் நடைபெற உணவு சாப்பிட்ட பிறகு பாதாம் சாப்பிடலாம். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உங்களை விடுவிக்கும்!
மூளை ஆரோக்கியமாக இருக்க
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் உதவுகிறது. பாதாம் சாப்பிடுவது உங்கள் புத்தி கூர்மையையும், அறிவுத் திறனையும் அதிகரிக்க செய்யும். எனவே படிக்கும் குழந்தைகளுக்கு பாதாம் சாப்பிட கொடுப்பது அவர்களின் அறிவுத் திறனை அதிகரித்து வகுப்பில் சிறந்த புத்திசாலி மாணவர்களாக அவர்களை திகழச்செய்யும்.
இரத்த அழுத்தம் குறைய
பாதாம் பருப்பில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பாதாம் பெரிதும் உதவுகிறது.