மருத்துவம்

ஓமத்தில் உள்ள மருத்துவ பயன்கள்!!

ajwain

ஓமம் மிக அற்புதமான ஒரு மருத்துவப் பொருள். இது பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஏற்றதாகும். ஓமத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

வயிறு பிரச்சினைகள் :

ஓமம் உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெறச் செய்ய உதவுகிறது. அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்து, அதனால் ஏற்படக்கூடிய வயிற்றுவலியை போக்குகிறது. மலச்சிக்ககல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல், வயிறு, உணவுக்குழாய் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றலையும் ஓமம் கொண்டுள்ளது.

சளி, இருமல் குணமாக :

சளி மற்றும் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. இதனால் இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. இதன் மூலம் மூக்கடைப்பு தொல்லையில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

சரும ஆரோக்கியம் :

உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த ஓமம் உதவுகிறது. ஓமத்தை பேஸ்டாக செய்து அதனை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியம் மேம்படும். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஓமம் திகழ்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்க ஓமம் மிகவும் உதவுக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. ஓமம் இரத்த நாளங்களை தளர்த்தி, அதனை விரிவடைய செய்கிறது. இதனால் உயர் அழுத்தம் குறைக்கப்படுகிறது.

கெட்ட கொழுப்பு குறைய :

உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்க ஓமம் உதவுகிறது. கெட்ட கொழுப்பை நீக்கும் அதே நேரத்தில், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் ஓமம் மிகவும் உதவுகிறது.

இதய நோய் குணமாக :

ஓமத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. எனவே இதய நோயாளிகள் ஓமத்தை உட்கொள்வது நல்லது. மேலும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ஓமத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.

உடல் எடை குறைய :

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக ஓமம் விளங்குகிறது என்று சொன்னால் அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் சரியான செரிமானம் நடைபெறாமல் இருத்தல், மலச்சிக்கல், வாயு தொல்லை, கெட்ட கொழுப்பு போன்றவையே அதிக உடல் எடைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாக ஓமம் திகழ்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கவும் இது பயன்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் ஓம வாட்டர் அல்லது ஓமம் கலந்த உணவை உட்கொண்டு வருவது நல்ல பலனை அளிக்கக்கூடியது.

காது வலி நீங்க :

காது மற்றும் பல் வலிக்கு ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாக ஓமத்தை பயன்படுத்தலாம். ஓம எண்ணையின் இரண்டு துளிகளைக் காதில் விடுவதன் மூலம் காது வலி உடனடியாக குணமாகுவதை உங்களால் பார்க்க முடியும். 

பல் வலி உடனே சரியாக :

வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஓமத்தை கலந்து நன்கு வாய் கொப்பளிப்பதால் பல் வலி என்னும் அவதியிலிருந்து உங்களால் உடனடியாக விடுபட முடியும்.

சுவாச பிரச்சனை தீர்வு :

பலவிதமான சுவாச பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஓமம் விளங்குகிறது. இஞ்சி மற்றும் ஓமத்தை கலந்து குடிப்பதனால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும். மேலும் மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சினைகளுக்கும் இது சிறந்த ஒரு மருந்துப் பொருளாக திகழ்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button