தனது மகனை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் ஹொரணை கந்தானைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த குறித்த நபர் மாமியாருடன் சிறுவன் இருந்தபோது துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் பலியாகியுள்ளார்.