செய்திகள்விளையாட்டு

ஜோகோவிச் 6வது முறையாகவும் சம்பியன்!!

உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த சம்பியன் பட்டம் மூலம் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்த தொடரில் ஆறாவது சம்பியன் பட்டத்தை வென்றார்.

எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டேனில் மெட்வேடவ் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செட்டுகளில் மீண்டெழுந்த ஜோகோவிச், 6-3, 6-3 என்ற செட்களில் வெற்றிக்கொண்டு சம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக ஜோகோவிச், 2009, 2013, 2014, 2015, 2019ஆம் ஆண்டுகளில் இந்த தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button