
2041ம் ஆண்டிற்குள் இலங்கையில் 4 பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பர் என்று கணிப்புக்கள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் சுமார் 2.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.