ஒரு பூவின் புலம்பல்……
வணக்கம் ஆரணி, உன் மடல் கண்டதில் மன மகிழ்வு. நலம் கேட்டிருந்தாய்….. நலமே….என்னளவில் நான் என்றும் நலமே…….
ஏதோ ஒன்றிற்காய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்…..என் பாதையை மெருகேற்றுவதற்காய்…….
தினம் தினம் எண்ணங்களால் என்னை புதுப்பித்துக்கொண்டிருப்பவள் நான், எப்போதாவது துவண்டுபோனாலும் எழுந்திருக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்….
கண்ணாடி முன்நின்று என்னோடு நான் பேசிக்கொண்ட, என்னை நான் தேற்றிக்கொண்ட பொழுதுகள் மிக அதிகம்……
வண்ணங்கள் குழைத்து வார்த்து , பார்த்து பார்த்து வரைந்து முடித்து ஓவியத்தின் அழகு கண்டு நெஞ்சத்தால் நெகிழ்ந்து நிற்கும் ஓவியனைப்போல நானும்…..பல பொழுதுகளில்……
முடிந்துவிட்ட புள்ளிகளில்தான் பல கோலங்கள் பிறக்கிறது என்பதை நடைமுறையில் உணர்தல் எத்தனை பேரின்பம் தெரியுமா?
தோழியே, என்னைப்பற்றி கேட்டிருந்தாய், மடல் வழி பகிர்கிறேன், என்னைப்பற்றி…
மாரியும் கோடையுமற்ற ஒரு அழகிய பருவகாலத்தில், சூரியன் மெல்ல முகம் காட்டி, உலகத்தை இரட்சித்த இளங்காலைப் பொழுதொன்றில்தான் நான் பிறந்ததாக என் தாய் சொல்ல கேட்டிருக்கிறேன்.
தொடரும்………