கவிதைமுத்தமிழ் அரங்கம்.

மீட்பர் யாரோ – கவிதை!!

poem

எழுதியவர் – மொகமட் ஷாலி

விடியற்காலை…
அந்த வேதனைச் செய்தி
வஞ்சகமில்லா
பிஞ்சுகளோடு
வரட்டுப் போராட்டத்தை
கடல் நடத்தி
முடித்து விட்டது

படகு தாழ்வதும்
பதறிப் போவதும்
கடந்த காலம்
விட்டுச் சென்ற
வெட்கமில்லா
வேதனைத் தளும்புகள்
தான்

ஆபத்தை
வந்த பிறகு உணரும்
ஒரு சமூகமாக
பழகிப் போனது
இன்று வரை மாறவில்லை
என்பது தான்
புதிய பதிவு

ஆவேசத்தை
முடிந்த பிறகு காட்டுவதும்
அதிகாரத்தை
அறிந்தும்
பரிகொடுப்பதும்
ஒன்றும் புதிதில்லை
எப்போதும் உள்ளதுதான்

13 இல் ஒரு மாதிரியும்
19 இல் வேறொரு
மாதிரியும்
20 இன்
இயலாமைகளாகவும்
எமது சமூக
அரசியலின்
கரைந்து போகும்
தரமில்லாத சாயங்களாக

துவேஷங்களால்
ஆழப்படும்
இந்த தேசத்தில்
உங்களுக்கென்றொரு
கொள்கைப் பாலத்தை
கட்டத் தெரியவில்லை
நீங்கள் எப்படி
கடல் மேல் பாலம்
அமைப்பீர்கள்

கரை சேர்வது
நிச்சயமில்லை என்ற
படகுப் பாதை போன்று
இந்த சமூகமும்
இலக்குகளை
அடமானம் வைத்து விட்டு
மீட்டுத் தருகிறோம்
என்று அழைத்துச் செல்லும்
பரிதாபம்
ஒழியும் வரையும்
அந்த ஓட்டை விழுந்த
படகுப் பாதை தான்
இந்த சமூகத்தின்
பயணமும்….
மீட்டிடுவார் யாரோ…

Related Articles

Leave a Reply

Back to top button