ஆன்மீகம்செய்திகள்

நவகிரக பலன்கள்!!

navakirakam

ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் எனலாம். ஜாதகத்தில் அவைகளின் அமைப்பைப் பொறுத்தும், கிரக பெயர்ச்சியின் போது கோசார பலன்களைப் பொறுத்து ஒருவருக்கு நற்பலன்கள் அல்லது கிரக அமைப்புக்கேற்ற கெடு பலன்கள் ஏற்படும்.

ஒரு கிரகம் தனக்கு சாதகமான இடத்தில் அமர்ந்தால் உச்சம் எனலாம். அப்படி நவகிரகங்கள் எந்த ராசியில் உச்சமடையும். ஜனன கால ஜாதகத்தில் உச்சமடைந்திருந்தால் அந்த கிரகம் எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் :

ஜனன ஜாதகத்தில் மேஷத்தில் உச்சமாக பெற்றிருந்தால், அவர்கள் அரசாங்க வழியில் சிறப்பான வாழ்வை அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் நல்ல உடல் நலனும், எந்த வித குறைபாடும் இல்லாதவர்களாகவும், துன்பம் தரும் எந்த நோயும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

சந்திர பகவான் :

ரிஷப ராசியில் உச்சமாக பெற்றவர்கள், அனைவராலும் விரும்பப்படக்கூடிய நபராக இருப்பர். விரும்பிய உணவும், நல்ல வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை, அணிகலங்களை அணிந்து அனுபவிக்கக்கூடியவராக இருப்பார்கள்.

செவ்வாய் பகவான் :

செவ்வாய் மகர ராசியில் உச்சமாக பெற்றவர்கள் இப்படிப்பட்ட அமைப்பால் நல்ல பெயர், புகழை அடைந்து சமூகத்தில் உயர் நிலையில் இருப்பார்.

புதன் பகவான் :

ஞானத்தின் கடவுளான புதன் பகவான் கன்னி ராசியில் உச்சம் பெற்றிருந்தால், அவர் கல்வி, கேள்விகள் மட்டுமில்லாமல், சங்கீதம், நடன என அவர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று, பிரகாசிப்பார். இவரின் அறிவு ஒவ்வொரு நாளும் பிரகாசிக்கும். கணினி துறையில் இருப்பவர்கள் நீண்ட கால பதவி, நல்ல பேறு பெறுவார்கள்.

குரு பகவான் :

குரு பகவான் கடகத்தில் உச்சம் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் பிறக்கும் போதே செல்வ வளங்களைப் பெற்றவராகவும். அரசாங்க மதிப்பு கொண்ட யோகக்காரர். இவர் ஆண்டு அனுபவிக்க ஏராளமான சொத்துக்கள், வண்டி, வாகனம் என சுகத்தை அனுபவிக்கலாம். பணம் மட்டுமில்லாமல் எல்லா வகை கல்வி வித்தைகளை பெற்ற ஞானம் மிக்க பிளளைகளைப் பெறுவதோடு, தான திருமணங்களைச் செய்வார்கள்.

சுக்கிரன் பகவான் :

மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் மிகச் சிற்நத செல்வத்தைப் பெற்றவராகவும். உயர்ந்த கல்வி நிலையை பெற்று திகழ்வார்.

சனி பகவான் : துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெற்றவராக இருந்தால், அந்த ஜாதகர் மிகவும் உடல் வலிமை பெற்றவராகவும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கொண்டு சிறப்பாக வாழ்வார்.

அதோடு கிரகத்தின் அதிகாரியாக, தொழிலாளர்களுக்குத் தலைவராகவும், உழைத்து முன்னேற்றம் பெறுவார்கள். சேமிப்பு குணமுடையவராக சிறப்பாக வாழ்வார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button