இலங்கைசெய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

வலிகாமம், மூளாய் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்குச் சென்ற பதினாறு வயது மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சில மாதங்களில் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த ச. ரஜீவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதயில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது மாரி காலம் என்பதால் நீர் நிலைகள் நிறைந்து காணப்படும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் விபரீதங்களையே ஏற்படுத்தக்கூடும். அனைவரும் அதிக கவனத்துடன் செயற்பட்டு வீண் உயிரிழப்புகளைத் தவிர்க்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button