எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சீனத்தூதுவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போது இலங்கையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவரால் இலங்கையின் நிலை குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது எனவும்
ஊழல், அடக்குமுறையற்ற வெளிப்படையான ஆட்சியை நடாத்துவதற்கு எண்ணியுள்ளதுடன் sajith இலங்கையின் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தூதுவர் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.